உள்ளடக்கத்துக்குச் செல்

முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

முதலாம் தியோனீசியசு (அண். கி.மு. 432–367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்கு கிரேக்க குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஒரு அரசியலமைப்பு உள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்க பேரரசு ஆகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தருக்கும் அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக பழங்காலத்தில் கருதப்பட்டார். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

இன்றைய நாளில்...

அக்டோபர் 28:

ருக்மணி தேவி (இ. 1978· பி.ஸ்ரீ. (இ. 1981· மைசூர் வீ. துரைசுவாமி (இ. 1997)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 27 அக்டோபர் 29 அக்டோபர் 30

செய்திகளில் இற்றைப்படுத்து

உங்களுக்குத் தெரியுமா?

  • மரபுவழி சீன மெய்யியலில், யின் யாங்கு (படம்) என்பது வாழ்வில் இரவும் பகலும், எதிரும் புதிரும், எதிா்மறையும் நோ்மறையும் எப்படி ஒன்றையொன்று இயற்கையிலேயே சாா்ந்துள்ளது என்பதையும் எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று துலங்கும் என்பதை விளக்கும் இரட்டைத் தத்துவம் ஆகும்.
  • அசோகர் கல்வெட்டுக்கள் வட இந்தியாவிலும் பாக்கித்தானிலும் பௌத்தத்தின் முதல் உறுதியான வரலாற்றுச் சான்றுகளாகும்.
  • இசுலாமிய சமயத்தில் குலா எனப்படுவது கணவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால், மனைவி கணவனைத் திருமண முறிவு செய்வது ஆகும்.
  • மலேசிய அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2022 என்பது சபா, சரவாக் மாநிலங்களைத் தீபகற்ப மலேசியாவுடன் சமமான பங்காளிகளாக நிலைநிறுத்த இயற்றப்பட்ட சட்டத் திருத்தமாகும்.
  • இலங்கா பொடி என்பது மேற்கு ஒடிசாவின் சுபர்ணபூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இராவணனின் பெரிய உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்துவது இந்நிகழ்வின் சிறப்பு ஆகும்.
  • சைக்சு–பிக்கோ ஒப்பந்தம் 1916 இல் ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையேயான ஓர் இரகசிய ஒப்பந்தமாகும். உருசியா, இத்தாலி ஆகியவற்றின் ஒப்புதலுடன், முதலாம் உலகப் போரில் உதுமானியப் பேரரசு வீழ்ச்சி அடைந்தால் அதன் மாகாணங்களை எவ்வாறு தங்களுக்குள் பிரித்துக் கொள்ளலாம் என்பதை இவ்வொப்பந்தம் வரையறுக்கிறது.

தொகுப்பு

பங்களிப்பாளர் அறிமுகம்

நீச்சல்காரன், மதுரையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி. 2010 முதல் விக்கிப்பீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி முதலிய மொழிகளில் பங்களித்துவருகிறார். இதுவரை தமிழில் 174 புதிய கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். வார்ப்புருக்களின் ஆக்கத்திலும், மொழிபெயர்ப்பிலும் அவ்வப்போது பங்களித்துள்ளார். தமிழ்க் கணிமையில் ஆர்வமுடைய இவர் சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி முதலிய கருவிகளை உருவாக்கி உள்ளார். விக்கித் திட்டங்களுக்கான பல்வேறு கருவிகளையும், ஜாவாஸ்கிரிப்ட் நிரல்களையும் உருவாக்கியுள்ளார். சில துப்புரவுப் பணிகள் செய்யவும், புள்ளிவிவரங்கள் சேகரிக்கவும் இவரின் தானியங்கி பயன்படுகிறது.

சிறப்புப் படம்

செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான்

செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் (Merops leschenaulti) என்பது மெரோபிடே என்ற தேனீ-உண்ணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும், இது இந்தியா, வங்காளதேசம், இலங்கை முதல் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தோனேசியா வரை பரவியுள்ளது. இது 18–20 செ.மீ நீளமும் 26–33 கிராம் எடையும் கொண்டது, இவற்றின் பாலினங்கள் தோற்றத்தில் ஒத்தவை. இது பல வண்ணப் பறவை, நெற்றி, கழுத்து போன்ற பாகங்கள் கசுக்கொட்டை நிறமாகவும், ஏனைய பாகங்கள் பச்சை, மஞ்சள், கருப்பு, நீல நிறமாகவும் இருக்கும். இது முக்கியமாக பூச்சிகளை, குறிப்பாக தேனீக்கள், குளவிகளை உண்ணும். இப்புகைப்படம் இலங்கையின் யால தேசிய வனத்தில் எடுக்கப்பட்டது.

படம்: Charles J. Sharp
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=4296496" இலிருந்து மீள்விக்கப்பட்டது